செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் மோடியின் கட்டுப்பாட்டில் இருக்காது - இம்ரான்

Published On 2019-02-27 11:47 GMT   |   Update On 2019-02-27 12:02 GMT
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் மூண்டால் எனது கட்டுப்பாட்டிலோ இந்திய பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Modiscontrol #ImranKhan
இஸ்லாமாபாத்:

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் போர்பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

இதுவரை உலகில் நடந்த அத்தனை போர்களும் தவறான கணிப்பில்தான் நடந்துள்ளன. போர்களை தொடங்கியவர்களால் அது எங்கே போய் முடியும்? என்பதை யூகிக்க தெரியவில்லை. எனவே, உங்களிடமும், எங்களிடமும் உள்ள ஆயுதங்களை வைத்துகொண்டு தவறான கணிப்புகளை நாம் செய்ய முடியுமா? என்ற கேள்வியை நான் இந்தியாவின் முன்வைக்கிறேன்.



அப்படி இருநாடுகளுக்கும் இடையில் போர் மூண்டால் அது என்னுடைய கட்டுப்பாட்டிலோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்டுப்பாட்டிலோ இருக்காது. பயங்கரவாதம் தொடர்பாக நீங்கள் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றாலும் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அறிவார்த்தமாக யோசித்து, நாம் அமர்ந்து பேச வேண்டும் என இம்ரான் கான் கூறினார்.
#Indopakconflict #Modiscontrol #ImranKhan
Tags:    

Similar News