செய்திகள்

இந்தியா - மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள் - சுஷ்மா முன்னிலையில் கையொப்பமானது

Published On 2019-02-18 13:47 GMT   |   Update On 2019-02-18 13:47 GMT
இந்தியா - மொராக்கோ இடையே வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இன்று 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #SushmaSwaraj #MoroccoFM #MoU #SushmainMorocco
ரபாட்:

அரசுமுறை பயணமாக மொராக்கோ நாட்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பவுரிட்டாவை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வேரறுப்பது, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நிதியுதவிகள் செல்வதை தடை செய்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது என்று இந்த ஆலோசனையின்போது தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இருதரப்பிலும் வர்த்தகரீதியான விசாக்கள் வழங்குவதை எளிமையாக்கும் நடைமுறை, குறைந்த செலவில் வீடுகள் கட்டும் திட்டம், நகர அபிவிருத்தி, ஸ்மார்ட் சிட்டி எனப்படும் மாதிரி நகரங்களை ஏற்படுத்தும் திட்டம், இளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் மொராக்கோவும் இனி இணைந்து செயலாற்ற 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இன்று கையொப்பமாகின. #SushmaSwaraj #MoroccoFM #MoU #SushmainMorocco
Tags:    

Similar News