செய்திகள்

கலிபோர்னியாவில் போலீசார் துப்பாக்கிச்சூடு- பாப் பாடகர் உயிரிழப்பு

Published On 2019-02-14 10:27 GMT   |   Update On 2019-02-14 10:27 GMT
கலிபோர்னியாவில் பாஸ்ட் புட் அருகில் காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாப் பாடகரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #PopSingerdead
லாஸ் ஏஞ்சல்ஸ்:

கலிபோர்னியாவின் வாலஜோ பகுதியில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடை ஒன்றின் முன் மெர்சிடஸ் கார் ஒன்று நீண்டநேரம் நின்றுக் கொண்டிருந்தது. இதனையடுத்து அந்த கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த ஊழியர்கள் அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது, ஒருவர் ஓட்டுனர் சீட்டில் சரிந்து விழுந்துகிடப்பதை கண்டனர்.

இதை தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பூட்டி இருந்த காரின் கதவை திறந்தனர். அப்போது ஓட்டுனர் சீட்டில் ஒருவர் அசைவின்றி கிடப்பதை அறிந்தனர். அவரது மடியில் துப்பாக்கி இருந்ததையும் கவனித்தனர்.  கார் இயக்க நிலையிலேயே இருந்தது. இதன் இயக்கத்தை நிறுத்த முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த நபர் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார்.

இதனை கவனித்த போலீசார், தங்களை நோக்கி சுட முயற்சிப்பதாக நினைத்து, அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் அவர், பாப் பாடகர் வில்லி மெக்காய் என தெரியவந்தது. இச்சம்பவம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றுள்ளது.

இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட படுகொலை என்றும், போலீசாரின் இனவாத செயல் என்றும் மெக்காயின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தங்களை பாதுகாத்துக் கொள்ளவே அவரை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக  போலீசார் தரப்பில் கூறியுள்ளனர்.

இது குறித்து வில்லி மெக்காயின் அண்ணன், மார்க் மெக்காய் கூறுகையில் , ‘போலீசார் அமைதியான முறையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யாமல், இவ்வாறு செய்தது சரியான பணி அல்ல’ என கூறினார். #PopSingerdead
  
Tags:    

Similar News