செய்திகள்

அந்தமான் அருகே வங்கக்கடலில் மீண்டும் நிலநடுக்கம்

Published On 2019-02-13 13:09 IST   |   Update On 2019-02-13 13:09:00 IST
அந்தமான் தீவுகள் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு பாம்பூ பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. #AndamanIslands #Earthquake
போர்ட்பிளேர்:

வங்கக்கடலில் நேற்று சென்னைக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 5.1 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வட அந்தமான் போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் லேசாக உணரப்பட்டது.

இந்தநிலையில் இன்று அந்தமான் தீவுகள் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு பாம்பூ பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது.

இன்று அதிகாலை 1.51 மணி அளவில் இந்த நில நடுக்கம் உருவானது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றி தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை. #AndamanIslands #Earthquake

Tags:    

Similar News