செய்திகள்

சோமாலியா - அமெரிக்க படை நடத்திய வான்வழி தாக்குதலில் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள் பலி

Published On 2019-01-03 15:29 GMT   |   Update On 2019-01-03 15:29 GMT
அமெரிக்கா ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் சோமாலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 10 அல் ஷபாப் பயங்கரவாதிகள் பலியாகினர். #Somalia #USAirStirkes
மொகடிஷு:

சோமாலியாவில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அல் ஷபாப் பயங்கரவாதிகள் செயற்பாடுகள் சோமாலியாவில் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற போதிலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த சோமாலியா அரசு தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வேட்டையில் அமெரிக்க ராணுவமும் இணைந்துள்ளது.

இந்நிலையில், சோமாலியா நாட்டின் மேற்கு பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா இன்று வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் அல் ஷபாப் பயங்கரவாதிகள் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடத்திய தாக்குதலில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டன என அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. #Somalia #USAirStirkes
Tags:    

Similar News