செய்திகள்

பிரேசில் அதிபர் தேர்தலில் ஜெய்ர் போல்சோனரோ வெற்றி

Published On 2018-10-29 12:46 GMT   |   Update On 2018-10-29 12:46 GMT
பிரேசில் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #Brazilelection #Bolsonarowinspresidency
சாவ் பாலோ:

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசில் நாட்டில் கடந்த 2003 முதல் 2016 வரை 13 ஆண்டுகள் பி.டி. கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியின் சார்பில் அதிபராக பதவிவகித்து வந்த டில்மா ரவுசெப் கடந்த 2016-ம் ஆண்டில் பதவியிறக்கம் செய்யப்பட்டார்.

இதைதொடர்ந்து, கடந்த இரண்டாண்டுகளாக பழமைவாதியான மைக்கேல் டேமர் இடைக்கால அதிபராக பதவி வகித்தார். நேற்று அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் சோசலிச விடுதலை கட்சியை சேந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெய்ர் போல்சோனரோ 55.2 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இடதுசாரி தொழிலாளர்கள் கட்சி வேட்பாளர் பெர்னான்டோ ஹட்டாட் 44.8 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

பிரேசில் அரசு மற்றும் அரசியலில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் எனது முதல் வேலை என்ற வாக்குறுதியுடன் வெற்றிபெற்றுள்ள அதிபர் ஜெய்ர் போல்சோனரோ-வுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Brazilelection #Bolsonarowinspresidency
Tags:    

Similar News