செய்திகள்

ரூ.40 கோடி வங்கி மோசடியில் சிக்கிய தொழிலதிபரை இந்தோனேசியா இந்தியாவிடம் ஒப்படைத்தது

Published On 2018-10-16 13:56 GMT   |   Update On 2018-10-16 13:56 GMT
வங்கிகளில் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு இந்தோனேசியா நாட்டில் தலைமறைவாக இருந்த தொழிலதிபர் வினய் மிட்டல் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். #VinayMittal
ஜகர்தா:

இந்திய வங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று, திருப்பு செலுத்தாமல் மோசடி செய்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, ஜத்தின் மேத்தா, மெகுல் சோக்சி உள்ளிட்டவர்கள் இங்கிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 

இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து நீதியின் முன்னர் நிறுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

அவ்வகையில், வங்கிகளில் 40 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு இந்தோனேசியா நாட்டில் தலைமறைவாக  இருந்த பிரபல தொழிலதிபர் வினய் மிட்டல் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

தேடப்படும் தலைமறைவு குற்றவாளியான அவரை கண்டுபிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என சர்வதேச போலீஸ் துறையான ‘இன்ட்டர்போல்’ அமைப்பை  சி.பி.ஐ. வலியுறுத்தி இருந்தது.



வினய் மிட்டலுக்கு எதிராக ‘இன்ட்டர்போல்’ சார்பில் சமீபத்தில் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ எனப்படும் கைது உத்தரவு வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையில், இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் வினய் மிட்டலை கைது செய்த அந்நாட்டு அதிகாரிகள் இன்று அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். #VinayMittal #VinayMittalextradited #Rs40crorebankfraud 

Tags:    

Similar News