செய்திகள்

20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ரஷியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விடுதலை

Published On 2018-10-14 13:00 GMT   |   Update On 2018-10-14 13:00 GMT
ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி 20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் இன்று விடுதலை ஆனார். #Russianoppositionleader #Navalny #Navalnyreleased
மாஸ்கோ:

ரஷிய அதிபர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது. எனவே, பொதுமக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவல்னி வலியுறுத்தி வருகிறார்.
 
இந்த கருத்தை முன்வைத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுமாறு தனது கட்சியினரை அவர் கேட்டு கொண்டுள்ளார். 

அவ்வகையில், மாஸ்கோ நகரில் கிரெம்ளின் மாளிகை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அலெக்சி நவல்னி-யை கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர்.

கடந்த மாதம் 24-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 20 நாள் சிறைக்காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அவரது காவல் முடிவடைந்ததையடுத்து இன்று காலை அவர் விடுதலை செய்யப்பட்டார். #Russianoppositionleader #Navalny #Navalnyreleased 
Tags:    

Similar News