செய்திகள்

அமெரிக்காவில் கார் வெடித்து சிதறி 3 பேர் பலி

Published On 2018-10-02 02:18 IST   |   Update On 2018-10-02 02:18:00 IST
அமெரிக்காவில் கார் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர். #Pennsylvania #CarExplosion
வாஷிங்டன்:

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆலன்டவுன் என்கிற நகரம் உள்ளது. இங்கு உள்ள தெரு முனை ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 9.30 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நின்றுகொண்டிருந்த 3 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.



இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

கார் வெடித்து சிதறியது எப்படி? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அதே சமயம் இது பயங்கரவாத தாக்குதல் கிடையாது என்றும் பொதுமக்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் போலீசார் உறுதிபட தெரிவித்தனர்.   #Pennsylvania #CarExplosion
Tags:    

Similar News