செய்திகள்

இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கும் இயற்கை - நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி தாக்கியது

Published On 2018-09-28 14:12 GMT   |   Update On 2018-09-28 14:12 GMT
இந்தோனேசியாவில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதைத்தொடர்ந்து சுனாமி ஏற்பட்டுள்ளது. #7.5magnitudeearthquake #Indonesiaarthquake #TsunamiAttack
ஜகர்தா:

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று மாலை மத்திய பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது.

சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், ஒருவர் பலியாகி, 10-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #7.5magnitudeearthquake #Indonesiaarthquake #TsunamiAttack
Tags:    

Similar News