செய்திகள்

நேபாளத்தில் ரூ.18 ஆயிரம் கோடி நீர்மின் திட்டம் - சீனாவிடம் ஒப்படைப்பு

Published On 2018-09-25 06:34 GMT   |   Update On 2018-09-25 06:34 GMT
நேபாளத்தில் ரூ.18 ஆயிரம் கோடி நீர்மின் திட்டத்தை சீனாவின் கெஷூபா குரூப் கார்ப்பரேசன் கம்பெனியிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. #HydroPowerPlant

காத்மாண்டு:

நேபாளத்தில் கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரிகட்ட அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. எனவே முன்னாள் பிரதமர் ஷேர் பகதுர் துமே தலைமையிலான அரசு புதி கண்டகி நீர்மின் திட்டத்தை தொடங்க திட்டமிட்டது.

அதன் மூலம் 1200 மெகாவாட் மின்சாரம் தயாரித்து உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்ட்டது. பின்னர் நடத்திய ஆய்வின், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.

3560-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக ஏரியில் மூழ்கும். 4.557 வீடுகள் பாதி அளவு மூழ்கும் அபாயம் இருப்பது தெரியவந்தது. எனவே இந்த திட்டம் கைவிடப்பட்டது.


 

தற்போது அங்கு பிரதமர் கே.பி.ஒலி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் கைவிடப்பட்ட புதி கண்டகி நீர்மின் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த திட்டத்தை சீனாவின் கெஷூபா குரூப் கார்ப்பரேசன் கம்பெனியிடம் ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டம் ரூ.18 ஆயிரம் கோடி செலவில் நடை முறைப்படுத்தப்பட உள்ளது. #HydroPowerPlant

Tags:    

Similar News