செய்திகள்

உலகின் முதல் ஹைட்ரஜன் ரெயில்- ஜெர்மனியில் பயணம்

Published On 2018-09-18 06:54 GMT   |   Update On 2018-09-18 06:54 GMT
பிரான்சின் ஆல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் ஹைட்ரஜன் ரெயில் ஜெர்மனியில் பயணத்தை தொடங்கியுள்ளது. #HydrogenTrain
பெர்லின்:

முதன்முதலில் ரெயில் நீராவி மூலம் இயக்கப்பட்டது. பின்னர் டீசல் மூலமும் தற்போது மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரெயில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் ஆல்ஸ்டாம் நிறுவனம் இந்த ஹைட்ரஜன் ரெயிலை உருவாக்கியுள்ளது. இந்த ரெயில் ஜெர்மனியின் பரீமெர்வோர்டு ரெயில் நிலையத்தில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது. 2021-ம் ஆண்டிற்குள் 14 புதிய ஹைட்ரஜன் ரெயில்களை ஜெர்மனி முழுவதும் இயக்க வேண்டும் என்று இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


ஹைட்ரஜன் தொட்டி மற்றும் எரிபொருள் பேட்டரிகளை கூரை மீது பொருத்தி ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இணைப்பதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. #HydrogenTrain
Tags:    

Similar News