செய்திகள்

சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணம் - அமெரிக்க தனியார் நிறுவனம் அறிவிப்பு

Published On 2018-09-15 05:45 GMT   |   Update On 2018-09-15 05:45 GMT
சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.#Moon #satellite

லாஸ்ஏஞ்சல்ஸ்:

சந்திரனுக்கு முதன் முறையாக அமெரிக்கா ஆட்களை அனுப்பியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முறையாக அங்கு கால்பதித்து சரித்திர சாதனை படைத்தார். அமெரிக்காவை தொடர்ந்து சந்திரனில் பல்வேறு நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே சந்திரனில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளும்படி ‘நாசா’ மையத்திடம் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனவே சந்திரனின் உட்புறத்தில் மிக தீவிரமான ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.


அதற்காக ‘பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த தகவலை அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நிறுவனம் என்ற பெருமை பெறுகிறது. அதே நேரத்தில் நிலவுக்கு சென்று வர வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவும் நனவாகப் போகிறது.

சந்திரனுக்கு 2 சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்க போவதாக கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதத்தில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அறிவித்து இருந்தது. #Moon #satellite

Tags:    

Similar News