செய்திகள்

ரகசியமாக கனடா சென்ற இங்கிலாந்து இளவரசரின் மனைவி

Published On 2018-08-31 21:38 IST   |   Update On 2018-08-31 21:38:00 IST
இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன், தனது தோழியை சந்திப்பதற்காக ரகசியமாக கனடா சென்றுள்ளார். #England #PrinceHarry #MeghanMarkle
லண்டன்:

இங்கிலாந்து இளவரசரான ஹாரிக்கும், அமெரிக்க நடிகையான மேகனுக்கும் கடந்த மே மாதம் திருமணம் ஆனது. இந்த திருமண விழாவில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு புதுமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணத்துக்கு பிறகு முழுவதுமாக அரச குடும்பத்தின் விதிமுறைகளை பின்பற்றி வந்த மேகன், தற்போது அதனை மீறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளவரசரின் மனைவி மேகன், கனடாவில் வசிக்கும் தனது ஆருயிர் தோழி ஜெசிகா முல்ரோனியை சந்திக்க ரகசியமாக சென்றுள்ளார்.



இந்த பயணத்தில் எவ்வித அரச பாதுகாப்பும் இன்றி அவர் பயணித்துள்ளார். 3 நாட்கள் வரை அங்கு தங்கி இருந்த மேகன், தனது பழைய தோழர்களை சந்திப்பது, ஜெசிகாவின் குழந்தைகளுடன் விளையாடுவது என தனது நேரத்தை கழித்துள்ளார்.

இதையடுத்து, நாடு திரும்பியதும், இளவரசருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மேகன்,  தனது தோழி பரிந்துரை செய்த உடையை உடுத்தியுள்ளார். அது மிகவும் சிறியதாகவும், அரச குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். #England #PrinceHarry #MeghanMarkle
Tags:    

Similar News