செய்திகள்

ஜப்பானில் இயற்கையின் கோரத் தாண்டவங்களுக்கு ஒரே மாதத்தில் 300 பேர் பலி

Published On 2018-07-31 10:14 GMT   |   Update On 2018-07-31 10:14 GMT
ஜப்பான் நாட்டை இந்த மாதத்தில் தொடர்ந்து தாக்கிய மழை, வெள்ளம், வெப்பம் மற்றும் புயலால் 300-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். #Japandeathstop300 #Japanweatherrelateddeaths
டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் பல பகுதிகளில் இந்த மாதத்தின் முற்பகுதியில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 220-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இதனைதொடர்ந்து, கடந்த வாரத்தில் இருந்து ஜப்பானின் பல மாகாணங்களை வறுத்தெடுத்துவரும் 104 டிகிரி வெயிலின் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 பேர் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.



போதாக்குறைக்கு சமீபத்தில் வீசிய புயலால் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் மட்டும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் கடந்த 1982-ம் ஆண்டுக்கு பின்னர் அந்நாடு சந்தித்துள்ள மிகப்பெரிய பேரழிவாகும் என உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Japandeathstop300 #Japanweatherrelateddeaths
Tags:    

Similar News