செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் - வங்காளதேசம் அறிவிப்பு

Published On 2018-07-15 13:30 GMT   |   Update On 2018-07-15 13:30 GMT
இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத செயலுக்கும் வங்காளதேசம் மண்ணில் அனுமதி இல்லை என அந்நாட்டின் உள்துறை மந்திரி இன்று தெரிவித்துள்ளார். #terroristactivities #againstIndia
டாக்கா:

3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் நாட்டுக்கு வந்துள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகள் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்களும் கையொப்பமானது.

வங்காளதேசம் உள்துறை மந்திரி அசாதுஸ்ஸமான் கான் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தியா - வங்காளதேசம் உள்துறை மந்திரிகள் இடையிலான ஆறாவது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எல்லை பாதுகாப்பு மற்றும் எல்லை பராமரிப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசாதுஸ்ஸமான் கான், நமது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு உளவு தகவல்களை இந்தியா பரிமாறி வருவதாக குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நமது கொள்கையின் அடிப்படையில்  இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத நடவடிக்கைக்கு நமது நாட்டு மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். #terroristactivities #againstIndia 
Tags:    

Similar News