செய்திகள்

ஊழல் வழக்கில் கைதான நவாஸ் ஷரீப், மரியம் நவாஸ் அடியாலா சிறையில் அடைப்பு

Published On 2018-07-14 00:20 GMT   |   Update On 2018-07-14 00:20 GMT
பனாமா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். #NawazSharif #MaryamSharif
இஸ்லாமாபாத்:

பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, லண்டனில் இருந்து திரும்பி வந்த நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை நேற்று இரவு லாகூர் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

நவாஸ் ஷரீப் வருகையை அறிந்த அவரது கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் 50-க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நவாஸ் ஷரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோரை ராவல்பிண்டிக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை அங்குள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். #NawazSharif #MaryamSharif
Tags:    

Similar News