செய்திகள்

ரோஹிங்யா அகதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் - ஐநா பொது செயலாளர் அண்டோனியா குட்டரஸ்

Published On 2018-07-02 19:30 GMT   |   Update On 2018-07-02 19:30 GMT
ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வங்காளதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை சந்தித்தார். #Rohingyas #AntonioGuterres
டாக்கா:

மியான்மர் நாட்டில் சிறுபான்மையினராக வசிக்கும் ரோஹிங்யா இனத்தவர்கள் வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை சுமார் 7 லட்சம் பேர் அகதிகளாக பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பாட வேண்டும் என ஐநா சபை  வலியுறுத்தி வந்துள்ளது. 

இந்நிலையில், வங்காளதேசத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளை ஐ நா சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சந்தித்தார். அவருடன் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம், வங்காளதேசம் வெளியுறவு துறை மந்திரி மகமுது அலி, ஐநா சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி உள்பட பலர் உடனிருந்தனர். 

இதுதொடர்பாக குட்டரஸ் டுவிட்டரில் கூறுகையில், ரோஹிங்யா அகதிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், வரும் மழைக்காலத்துக்குள் ரோஹிங்யா அகதிகள் தங்குவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். #Rohingyas #AntonioGuterres
Tags:    

Similar News