செய்திகள்

பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் குழு நிகழ்ச்சி - விசாரணைக்கு உத்தரவு

Published On 2018-06-01 03:40 GMT   |   Update On 2018-06-01 03:40 GMT
பண்டைய பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக பள்ளி மாணவிகள் குழுவாக நின்று பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த தென்னாப்பிரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜோகன்ஸ்பர்க்:

தென்னாப்பிரிக்காவில் ஹோசா என்ற இனக்குழு அந்நாட்டின் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். இதனால், பல முக்கிய விவகாரங்களில் இந்த இனக்குழு தலைவர்களை அனுசரித்தே அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஹோசா இன பள்ளி மாணவிகள் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர்.

பாரம்பரியம் என்ற பெயரில் முக்கால் நிர்வாணமாக மாணவிகள் நின்று பாடலை பாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவிகளின் அந்தர உறுப்புகள் வெளிப்படையாக தெரியும் வண்ணம் பொது நிகழ்ச்சியில் மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.



இந்நிலையில், இவ்விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியர்கள் நியாயப்படுத்தியுள்ளனர். எங்கள் இனக்குழுவின் பாரம்பரியமான இந்த செயலால் நாங்கள் பெருமையடைகிறோம் என ஒரு ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News