செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் அணி சேர்ந்துள்ளது அமெரிக்கா - முஷரப் குற்றச்சாட்டு

Published On 2018-05-26 12:38 GMT   |   Update On 2018-05-26 12:38 GMT
பாகிஸ்தானை அமெரிக்கா தேவைப்படும் போது பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுகிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் குற்றம்சாட்டியுள்ளார். #PervezMusharraf
இஸ்லாமாபாத் : 
 

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் இன்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானை தேவைப்படும் போது அமெரிக்காபயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுகிறது. பனிப்போர் காலகட்டங்களில் இருந்தே அமெரிக்கா இந்தியாவை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா அணி சேர்ந்துள்ளது, பாகிஸ்தானை வெளிப்படையாக பாதிக்கும். 

ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை ஐக்கிய நாடுகளில் சபையில் விவாதிக்க இருக்கிறோம். இந்த பிரச்சனையில் ஒரு பக்க அணுகுமுறை இருக்குமானால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
 
எங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு பின்னர் மீண்டும் எதற்காக அமெரிக்கா தேடி வருகிறது என்பதற்கான காரணம் பாகிஸ்தான் மக்களுக்கு விளங்கவில்லை.  மேலும், தேவைப்படும் போது எங்களை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத சந்தர்ப்பங்களில் கழற்றிவிட்டு விடுவதையும் பாகிஸ்தானியர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். #PervezMusharraf
Tags:    

Similar News