செய்திகள்

ஓரிரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பேன் - மலேசிய பிரதமர் மஹாதிர் முகமது

Published On 2018-05-15 07:41 GMT   |   Update On 2018-05-15 07:41 GMT
ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் மட்டுமே பதவியில் நீடிப்பேன் என மிக சமீபத்தில் மலேசியா பிரதமராக பொறுப்பேற்ற மஹாதிர் முகமது தெரிவித்துள்ளார். #MahathirMohamad
கோலாலம்பூர்:

கடந்த வாரம் நடைபெற்ற மலேசிய பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 92 வயது நிரம்பிய மஹாதிர் முகமது மலேசியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை டோக்கியோவில் நடத்தும் கருத்தரங்கு ஒன்றில் பேசிய மஹாதிர் முகமது, இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலம் மட்டுமே மலேசிய பிரதமராக பதவி வகிப்பேன். பிரதமர் பதவியை விட்டு கீழே இறங்கினாலும், மலேசிய அரசின் பின்னல் இருந்து முக்கிய பங்காற்றுவேன் என தெரிவித்தார்.

மேலும், தான் பிரதமராக தொடர்ந்தாலும், விரைவில் சிறையிலிருந்து வெளிவர உள்ள அன்வர் இப்ராஹிம் கூட்டணி கட்சிகளின் தலைவராக தொடர்வார் என அவர் தெரிவித்துள்ளார். தனது தேர்தல் பிரசாரத்தின் போது, அன்வர் இப்ராஹிம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பிரதமராக்கப்படுவார் என மஹாதிர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்வர் இப்ராஹிமின் மனைவி தற்போது மலேசியா துணை பிரதமராக உள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது. #MahathirMohamad
Tags:    

Similar News