செய்திகள்

இந்தோனேசியா தேவாலய தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Published On 2018-05-13 11:30 GMT   |   Update On 2018-05-13 11:30 GMT
இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள மூன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. #IndonesiaChurchAttack

ஜகார்த்தா:

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்நிலையில், அந்நகரில் உள்ள மூன்று முக்கிய தேவாலயங்களில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 7:30 மணியளவில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்பட்டது. 



இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்திய ஆறு பயங்கரவாதிகளும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  #IndonesiaChurchAttack
Tags:    

Similar News