செய்திகள்

மியான்மரில் ராணுவம், போராளிக்குழுவினர் இடையே மோதல் - 19 பேர் பலி

Published On 2018-05-12 08:06 GMT   |   Update On 2018-05-12 08:06 GMT
மியான்மரில் ராணுவம் மற்றும் போராளிக் குழுவினர் இடையே நடைபெற்ற மோதலில் 19 பேர் உயிரிழந்தனர். #MyanmarClashes #MyanmarArmy #Rebels
யாங்கூன்:

மியான்மர் நாட்டில் போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் அரசு குற்றம் சாட்டுகிறது. அவர்களை ஒடுக்க ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக ராணுவத்துக்கும் போராளிக் குழுவினருக்குமிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் வடக்கு பகுதியில் உள்ள ஷான் மாநிலத்தில் இன்று போராளிக் குழுவினர் மற்றும் ராணுவத்துக்கு இடையே கடும் மோதல் நடைபெற்றது. சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நடந்த இந்த மோதலில் 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்தனர். #MyanmarClashes #MyanmarArmy #Rebels
Tags:    

Similar News