செய்திகள்

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை

Published On 2018-04-27 22:41 GMT   |   Update On 2018-04-27 22:41 GMT
சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
பெய்ஜிங்:

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஷாங்க் மாகாணம். இங்குள்ள மிசி கவுண்டி பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 28 வயது நபர், திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாக தாக்கினார்.

இதனால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் ஏழு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 12க்கு மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய நபர் போலீஸ் காவலில் உள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், இறந்தவர்களில் 5 பெண்கள், 2 ஆண்கள் என்பதும், தாக்குதல் நடத்தியவர் முன்னாள் பள்ளி மாணவர் என்பதும் தெரிய வந்தது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இச்சம்பவம் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்று என சீனா தெரிவித்துள்ளது. #Tamilnews
Tags:    

Similar News