செய்திகள்

ரசாயன குண்டுகளை பயன்படுத்தி சிரிய அரசு கொடூர தாக்குதல் - உறுதி செய்தது துருக்கி

Published On 2017-04-06 20:32 IST   |   Update On 2017-04-06 20:32:00 IST
சிரிய அரசின் ராணுவம் ரசாயன குண்டுகளை பயன்படுத்தி கொடூர தாக்குதலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்களை சோதனை செய்த துருக்கி உறுதி செய்து தெரிவித்துள்ளது.
அங்காரா:

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் நேற்று முன் தினம் ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது. 

இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் போராளிகள் பரவலாக வாழும் பகுதியில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் 27 குழந்தைகள் உள்பட சுமார் 86 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.



இந்நிலையில், சிரிய அரசின் ராணுவம் ரசாயன குண்டுகளை தான் பயன்படுத்தி கொடூர தாக்குதலில்  ஈடுபட்டதாக துருக்கி இன்று தெரிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த 32 பேர் மருத்துவ சிகிச்சைக்காக தெற்கு துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், தாக்குதலில் இறந்த 3 பேரை சோதனை செய்ததில் ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்படதாக துருக்கி தெரிவித்துள்ளது. 

துருக்கி அரசின் நீதித் துறை மந்திரி பெகிர் போஸ்டக் இந்த தகவலை தெரிவித்தார்.

Similar News