செய்திகள்

ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராக இருந்த கோயபல்ஸின், 106 வயது உதவியாளர் மரணம்

Published On 2017-01-30 14:05 GMT   |   Update On 2017-01-30 14:05 GMT
சர்வாதிகாரி ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் பிரச்சாகராகவும், உற்ற தோழனாகவும் இருந்த கோயபல்ஸின் 106 வயது உதவியாளரான பர்ன்ஹில்ட் போம்செல் என்ற பெண்மனி மரணமடைந்தார்.
முனீச்:

உலகையே நடுங்க வைத்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். இரண்டாம் உலகப் போருக்கான முக்கிய காரணமாக திகழ்ந்தவர். இவரது உற்ற தோழனாக திகழ்ந்தவர் கோயபல்ஸ். ஹிட்லரைப் பற்றி பெருமையாக தங்களது பத்திரிக்கையில் எழுதி மக்கள் ஆதரவை சம்பாதித்ததில் பெரும் பங்கு கோயபல்ஸ்க்கு உண்டு. கோயபல்ஸ் நாஜி கட்சியின் பிரச்சாகராகவும் பணியாற்றினார்.

கோயபல்ஸின் உதவியாளராக இருந்தவர் பர்ன்ஹில்ட் போம்செல், இவர் 1942 முதல் 1945-ம் ஆண்டு வரை கோயபல்ஸிடம் தனி உதவியாளராகவும், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோகிராபராகவும் பனியாற்றினார். குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி சார்பில் பல தகவல்கலை தயாரித்ததில் போம்செல் பங்கு அதிகம்.

முனீச் நகரின் தெற்குப் பகுதியில் வசித்து வந்த போம்செல், தனது 106 வயதில் கடந்த வாரம் மரணமடைந்தார். இவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. 

அந்தப் படத்தில் போம்செல் சில தகவல்கலை வெளியிட்டிருந்தார். ”கோயபல்ஸிடம் ஒரு டஜனுக்கும் மேலாக உதவியாளர்கள் பணியாற்றினர். நான் கோழையாக இருந்ததால் பல நேரங்களில் நாஜிகளின் நடவடிக்கையை எதிர்க்க முடியாமல் போனது. நாஜிக்களின் கட்டுப்பாட்டில் தான் அனைத்து ஊழியர்களும் இருந்தனர்.

சோவியத் படைகள் பெர்லினை முற்றுகையிட்ட போது ஹிட்லர் பதுங்கு குழியில் பதுங்கி விட்டார். முக்கிய நாஜி தலைவர்கள் அதிகமாக மது குடித்து தங்களை சுயநினைவு இல்லாமல் செய்து கொண்டனர்.” என தெரிவித்திருந்தார்.

1950 முதல் 20 வருடங்கள் ஜெர்மன் அரசின் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றிய போம்செல், 2011-ம் ஆண்டில் தான் கோயபல்ஸின் உதவியாளராக பணிபுரிந்த விஷயத்தை ஊடகங்களிடம் கூறினார்.

Similar News