செய்திகள்

காற்றில் மாசு: ஈரானில் பள்ளிகள் மூடப்பட்டது

Published On 2016-11-15 05:13 GMT   |   Update On 2016-11-15 05:13 GMT
காற்றில் ஏற்பட்ட மாசு காரணமாக ஈரானில் பள்ளிகள் மூடப்பட்டன.

தெக்ரான்:

ஈரானில் தற்போது குளிர்காலம் தொடங்கி விட்டது. இருந்தாலும் அங்கு காற்றில் கடுமையான மாசு கலந்து விட்டது. தலைநகர் தெக்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செம்பழுப்பு, வெள்ளை நிற புகை சூழ்ந்துள்ளது.

அங்குள்ள மலைகள் கண்ணுக்கு தெரியவில்லை. ரோட்டில் எதுவும் புலப்படவில்லை. எனவே பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் கார்பன் துகள்கள் அதிக அளவில் உள்ளது. எனவே, தெக்ரான் மற்றும் அதைச்சுற்றியுள்ள நகரங்களில் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதற்கான உத்தரவை கல்வித்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. மேலும் மாசு அதிகமாவதை தடுக்க ரோடுகளில் ஒற்றை இலக்கு மற்றும் இரட்டை இலக்கு நம்பர் கார்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் ஓட அனுமதிக்கப்பட்டது.

மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களில் இருப்பவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க ரோடுகளில் ஆங்காங்கே ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Similar News