செய்திகள்

பாகிஸ்தானில் போலி என்கவுண்ட்டரில் 4 பேர் பலி

Published On 2016-11-13 21:39 GMT   |   Update On 2016-11-13 21:39 GMT
பாகிஸ்தான் குலாஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் போலி என்கவுண்ட்டர் நடத்தி 4 பேரை கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், கவதார் மாவட்டத்தில் பேலார், குலாஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் போலி என்கவுண்ட்டர் நடத்தி 4 பேரை கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பலியானவர்களின் உடல்கள் தேசிய அடையாள அட்டைகள், மாணவர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் கேச் மாவட்டத்தை சேர்ந்த மாஸ்டர் அப்துல் ரகுமான் என்பவருடைய 14 வயது மகன் ஜபார் பலோச், அப்துல் சமது என்பவரின் மகன் சலாகுதீன், கரீம் பாக்ஷ் என்பவரது மகனான சாஜித் அலி, முகமது என்பவருடைய மகனான சபீர் அலி ஆவார்கள்.

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் இயங்கி வருகிற பலோச் மனித உரிமை அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பு படையினர், கவதார் மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

கொல்லப்பட்ட 4 பேரும் நீண்ட காலத்துக்கு முன்பு காணாமல் போனவர்கள் என்றும், அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Similar News