செய்திகள்

குவைத் நாடாளுமன்றம் கலைப்பு

Published On 2016-10-16 14:16 GMT   |   Update On 2016-10-16 14:16 GMT
குவைத் இளவரசர் ஷேக் ஷபா அல்-அஹமது அல்-ஷபா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக கூறியதாக குவைத் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
குவைத் சிட்டி:

குவைத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினை அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் மார்சௌக் அல்-கனேம் கூறியிருந்தார்.

இதனால் இளவரசர் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக இளவரசர் கூறியதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளது. சபாநாயகர் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குவைத் அரசியலமைப்புப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இரண்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.

Similar News