செய்திகள்

ஏமன்: தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 41 பேர் பலி

Published On 2016-05-23 14:40 IST   |   Update On 2016-05-23 14:40:00 IST
ஏமன் நாட்டிலுள்ள ஏடன் நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.
சனா:

ஏமன் நாட்டிலுள்ள ஏடன் நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலியாகினர்.

ஏமன் நாட்டின் துறைமுக நகரமான ஏடனில் அரசுப்படைகளுக்கான ராணுவத்தில் ஆள்சேர்ப்பு தேர்வுக்கான தேர்ச்சி பட்டியல் இன்று காலை வெளியானது. இந்த பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளனவா? என்பதை தெரிந்துகொள்ள பதர் ராணுவ முகாம் பகுதியில் ஏராளமானவர்கள் குவிந்திருந்தனர்.

அப்போது, கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே நுழைந்த ஒரு தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் அங்கு கூடியிருந்தவர்களில் 31 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நிகழ்ந்த அடுத்த சிலநிமிடங்களில் முகாம் வளாகத்தில் மேலும் மனிதகுண்டு ஒருதீவிரவாதி வெடித்து சிதறியதில் ஏழு ராணுவ வீரர்கள் பலியாகினர். இவ்விரு தாக்குதல்களிலும் 41 பேர் பலியானதாகவும், சுமார் நூறுபேர் படுகாயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News