உலகம்

காதல் திருமணம் செய்த மகள்களை மகனுடன் சேர்ந்து கவுரவக் கொலை செய்த தந்தை

Published On 2024-06-05 20:04 IST   |   Update On 2024-06-05 20:19:00 IST
  • காதலனுடன் சென்று திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர்.
  • பஞ்சாயத்து மூலம் இரு பெண்களையும் தன்னுடைய வீட்டிற்கு மீட்டுச் சென்றார்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் காதல் திருமணம் செய்ததற்காக இரண்டு மகள்களை தந்தை கவுரவக் கொலை என்ற வகையில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

லாகூரில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவில் உள்ளது விஹாரி. பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் நிஷாத், அப்ஷான் ஆகிய இளம் பெண்கள் (வயது 20) கடந்த மாதம் தங்களது வீட்டில் இருந்து வெளியேறினர்.

வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இருவரும் தங்களது காதலர்களை திருமணம் செய்து கொண்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகி அதன்பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தில் அந்த இரு பெண்களின் தந்தை, திருமணம் செய்த அந்த நபர்களின் குடும்பத்தினர் தனது இரண்டு மகள்களையும் தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கேட்டுள்ளார். அதன்படி பஞ்சாயத்தும் திருமணம் செய்து கொண்ட வாலிபர்களின் குடும்பத்தினரிடம், அந்த இரு பெண்களையும் அவரது தந்தையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி அந்த இரண்டு பெண்களும் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பின்னர் இருவரையும் வீட்டிற்கு அழைத்ததுச் சென்ற தந்தை, தனது மகனுடன் சேர்ந்த இருவரையும் துன்புறுத்தியுள்ளனர். பின்னர் இருவரும் குடும்பத்தினருடன் சேர்ந்த துப்பாக்கில் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் 1000 பெண்கள் இதுபோன்று கவுரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யப்படுவதாக கவலை தெரிவித்துள்ளது.

Similar News