செய்திகள்
மேம்பட்ட பிராசஸர், அதிரடி அம்சங்களுடன் புதிய ஐபேட் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் 8th ஜென் மாடலை அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட பிராசஸர், அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் டைம் ஃபிளைஸ் நிகழ்வில் ஐபேட் 8th ஜென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2019 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய பிராசஸரை விட 40 சதவீதம் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இவைதவிர மேம்பட்ட கேமரா, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஐபேட்எஸ் 14 தளத்துடன் கிடைக்கிறது.
புதிய ஐபேட் 10.2 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் விலை வாடிக்கையாளர்களுக்கு 399 டாலர்கள் என்றும் மாணவர்களுக்கு 299 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.