செய்திகள்

பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவிகித பங்குகளை வாங்குகிறது வால்மார்ட்

Published On 2018-05-09 11:49 GMT   |   Update On 2018-05-09 11:49 GMT
பிளிப்கார்ட் தளத்தின் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் நிறுவனம் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது.
புதுடெல்லி:

அமெரிக்க ரீடெயில் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-ல் 77% பங்குகளை சுமார் 1600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறது. இது அந்நிறுவன வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாக இது இருக்கிறது.

இந்தியாவில் 11 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனம் மொத்தம் 20.8 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. பென்டொன்வில், அர்கன்சாஸ் சார்ந்த வால்மார்ட்  பிளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வாங்குவதாக வால்மார்ட் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிளிப்கார்ட் தளத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், ஒப்பந்தம் கையெழுத்தானதும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். பிளிப்கார்ட் தளத்தை துவங்கும் போது சச்சின் மற்றும் பின்னி இருவரும் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றினர். பிளிப்கார்ட் நிறுவன இணை நிறுவனர் சச்சின் பன்சால் நிறுவனத்தில் தனது 5.5% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறார். 

ஒப்பந்தம் கையெழுத்தானதும் பின்னி பன்சால் நிறுவன பணியை தொடர்ந்து மேற்கொள்கிறார். ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனமும் பிளிப்கார்ட் தளத்தில் தனது 20% பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது.
Tags:    

Similar News