செய்திகள்

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

Published On 2017-10-21 14:56 IST   |   Update On 2017-10-21 14:56:00 IST
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் சார்ந்த தகவல்கள் அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், இந்த சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்ட்டுள்ளது. கைரேகை ஸ்கேனர் மற்றும் முக அங்கீகார (face recognition) வசதி கொண்டிருக்கிறது. அந்த வகையில் கைரேகை ஸ்கேனர் வசதி கொண்ட முதல் டேப்லெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனத்தில் IP68 சான்று பெற்றிருப்பதால் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டேப்லெட் ஐந்து அடி ஆழ நீரில் 30 நிமிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இத்துடன் ஈர கைகளுடன் டேப்லெட்டை இயக்க முடியும்.



சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சிறப்பம்சங்கள்:

- 8.0 இன்ச் WXGA, 800x1280 ஸ்கிரீன்
- ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
- 3 ஜிபி ரேம்
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 8 எம்பி பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு நௌக்கட்
- 4450 எம்ஏஎச் பேட்டரி

புதிய சாம்சங் டேப்லெட் வெவ்வேறு சூழ்நிலைகளை தாக்குப்பிடிக்கும் வகையிலும், அதிக அழுத்தம் மற்றும் கீழே விழுந்தாலும் அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சாதனத்துடன் வரும் எஸ்.பென் சாதனமும் IP 68 சான்று பெற்றிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் விலை சார்ந்து குறித்து தகவலும் இல்லை.

Similar News