செய்திகள்
அசுஸ் சென்போன் 4 மேக்ஸ்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்
தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ், சென்போன் 4 சீரிஸ்-இன் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய சென்போன் 4 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்களை பார்ப்போம்.
புதுடெல்லி:
தாய்வானைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் தனது சென்போன் 4 சீரிஸ்-இன் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. அதிக திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சென்போன் 4 மேக்ஸ் முதற்கட்டமாக ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அசுஸ் சென்போன் 4 மேக்ஸ் (ZC554KL) இருவித சிப்செட் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாடலில் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் மற்றொரு மாடலில் ஆக்டாகோர் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அசுஸ் சென்போன் 4 மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் ஐ.பி.எஸ். 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* 5000 எம்ஏஎச் பேட்டரி
* ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
* ஆக்டாகோர் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
* டூயல் சிம் ஸ்லாட்
அசுஸ் மேக்ஸ் ரக ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் பவர் பேங்க் வசதி சென்போன் 4 மேக்ஸ் ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அசுஸ் சென்போன் 4 மேக்ஸ் (ZC554KL) ரஷ்யாவில் RUB 13,900 அதாவது இந்திய மதிப்பில் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற சந்தைகளில் வெளியிடுவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.