செய்திகள்
இந்தியாவில் டேப்லெட் விற்பனை 16 சதவிகிதம் சரிந்தது
இந்தியாவில் டேப்லெட் சாதனங்களின் விற்பனை 16 சதவிகிதம் குறைந்துள்ளதாக சமீபத்திய சி.எம்.ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் டேப்லெட் சாதனங்களின் விற்பனை 16 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக சமீபத்திய சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான விளம்பரங்கள் இல்லாததே விற்பனை சரிவுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர்- டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாத காலகட்டத்தில் இந்திய டேப்லெட் விற்பனை 6 சதவிகிதம் குறைந்துள்ளது. எனினும் இந்திய டேப்லெட் சந்தையில் 34 சதவிகிதம் பேர் டேட்டாவிண்ட் டேப்லெட்களை பயன்படுத்தி வருகின்றனர். டேட்டாவிண்ட் நிறுவனத்தை தொடர்ந்து ஐபால் 16 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 15 சதவிகித பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடம்பிடித்துள்ளது.
4ஜி மற்றும் 3ஜி சார்ந்த டேப்லெட்களின் விற்பனை முந்தைய காலாண்டை விட 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன்படி மொத்தம் 31 சதவிகித டேப்லெட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 2ஜி மற்றும் வைபை சார்ந்த டேப்லெட்கள் 62 சதவிகிதம் சரிந்துள்ளது.
இந்தியாவில் 4ஜி பயன்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து 4ஜி டேப்லெட்கள் 50 சதவிகிதம் வரையிருக்கும் என சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.