செய்திகள்

2ஜி விலையில் 4ஜி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார்

Published On 2017-03-17 17:42 IST   |   Update On 2017-03-17 17:42:00 IST
மொபைல் டேட்டா திட்டங்களில் 1ஜிபிக்கும் அதிகாக ரீசார்ஜ் செய்வோருக்கு 2ஜி விலையில் 4ஜி டேட்டா வழங்க ஐடியா செல்லுலார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிகியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் பிரபல டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லுலார் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க்களுக்கு ஒரே கட்டணத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மார்ச் 31, 2017 முதல் 1ஜிபிக்கும் அதிகமான டேட்டா ரீசார்ஜ் செய்வோருக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என அனைத்து நெட்வொர்க்களிலும் ஒரே கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக ஐடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



தசற்சமயம் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் கட்டணங்கள் வித்தியாசமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோவுடனான போட்டியை எதிர்கொள்ள ஐடியாவின் 4ஜி மொபைல் டேட்டா கட்டணம் 2ஜி சேவைக்கு நிகராக நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. 

ஐடியா நெட்வொர்க்கில் 1 ஜிபி 2ஜி டேட்டா ரூ.170க்கு வழங்கப்படுகிறது, 4ஜி டேட்டாவுக்கு ரூ.123 வசூலிக்கப்படுகிறது. முன்னதாக ஐடியா டேட்டா திட்டங்கள் டவுன்லோடு வேகத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News