தமிழ்நாடு செய்திகள்

தூவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

உடுமலை அருகே தூவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

Published On 2025-07-12 13:02 IST   |   Update On 2025-07-12 13:02:00 IST
  • அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
  • கடந்த ஜூன் 16-ந்தேதி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த ஜூன் 16-ந்தேதி அணை நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து காணப்படுவதால் அணையில் இருந்து கடந்த 25 நாட்களாக ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள கேரள மாநிலம், மூணாறு, தலையாறு, மறையூர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணை நீர்வரத்துக்கு முக்கிய ஆறாக உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மறையூர் அருகே அமைந்துள்ள தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News