தமிழ்நாடு செய்திகள்
வாரப்பட்டியில் நாளை மின்நிறுத்தம்
- வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
- சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
சுல்தான்பேட்டை:
சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலப்பநாயக்கன் பாளையம், மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூராண்டாம் பாளையம், அக்கநாயக்கன் பாளையம், சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.