தமிழ்நாடு செய்திகள்

58 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம் - லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

Published On 2025-06-05 11:58 IST   |   Update On 2025-06-05 11:58:00 IST
  • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது.
  • சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 45.70 அடியாக உள்ளது.

கூடலூர்:

கேரளாவில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 148 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி 160 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130.05 அடியாக உள்ளது. 1040 கன அடி நீர் வருகிற நிலையில் தமிழக பகுதிக்கு 1778 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 4709 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் விவசாய பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணைக்கு 1295 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 58.04 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3235 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. 15 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91.18 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 45.70 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. பெரியகுளம் 2, உத்தமபாளையம் 0.8, பெரியாறு அணை 3.2, சண்முகாநதி 0.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News