குற்றால அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள்- குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்
- அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது.
- அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த சாரல் மழையின் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது.
இதனால் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதலே குடும்பத்துடன் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டது,
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பங்களுடன் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குவிந்தனர்.