தமிழ்நாடு செய்திகள்
கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் அழைத்து வாழ்த்திய விசிக தலைவர் திருமாவளவன்
- இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
- கார்த்திகாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் உதவி தொகை வழங்கினார்
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்றன.
இந்த இரு அணியிலும் தமிழகத்தைச் சேர்ந்த அபினேஷ் மற்றும் கார்த்திகா ஆகியோர் விளையாடி தங்கம் பெற பெரும் பங்கை வகித்தனர்.
தங்கம் வென்ற கையுடன் சென்னை வந்த இருவரையும், அந்த நொடியே நேரில் அழைத்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.
இதனையடுத்து கபடி வீராங்கனை கார்த்திகாவிடம் வீடியோ காலில் பேசி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தங்கம் வென்ற கார்த்திகாவை நேரில் அழைத்து ரூ.50,000 வழங்கி விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்தினார்.