தமிழ்நாடு செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதால் தமிழகம் கூடுதல் நிதி பெறுகிறது: அமைச்சர் ஐ. பெரியசாமி
- கடந்த ஆண்டு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக பிரதமர், மத்திய அமைச்சரிடம் இருந்து விருது பெற்றோம்.
- ஊராட்சி எண்ணிக்கை என வேறுபாடு இன்றி வேலை கேட்கும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம்.
100 நாள் வேலை திட்டத்தை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுத்துவதாலேயே தமிழகம் கூடுதல் நிதி பெறுகிறது என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தியதற்காக பிரதமர், மத்திய அமைச்சரிடம் இருந்து விருது பெற்றோம்.
கட்டுமான பொருட்கள் மற்றும் பணிகளுக்கான பொருட்கூறு 75 சதவீதம் மத்திய அரசு, 25 சதவீதம் மாநில அரசு வழங்குகிறது. அண்ணாமலை கூறிய 60:40 என்பது தவறான தகவல்.
ஊராட்சி எண்ணிக்கை என வேறுபாடு இன்றி வேலை கேட்கும் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பது சட்டம் எனத் தெரிவித்துள்ளார்.