தமிழ்நாடு செய்திகள்
ரூ.98 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு..!
- ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி.
- அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்.
சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என்ற வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.