தமிழ்நாடு செய்திகள்

கடலூரில் போலீஸ் என்கவுண்ட்டரில் ரவுடி சுட்டுக்கொலை

Published On 2025-04-02 15:06 IST   |   Update On 2025-04-02 15:11:00 IST
  • புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய், கடலூர் போலீசாரின் என்கவுண்ட்டரில் உயிரிழந்துள்ளார்.
  • ரவுடி விஜய் மீது தமிழகம், புதுவையில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடலூர் மாவட்டம் புதுச்சத்தரித்தில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய், கடலூர் போலீசாரின் என்கவுண்ட்டரில் உயிரிழந்துள்ளார்.

லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடி விஜய் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

கடலூரில் பதுங்கி இருந்த விஜய்யை, போலீசார் பிடிக்க முயன்றபோது அரிவாளால் தாக்கியதில் இரண்டு போலீசார் காயம் அடைந்தனர்.

இதனையடுத்து, தற்காப்புக்காக போலீசார் சுட்டுதாக கூறப்படுகிறது.

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஜய் மீது தமிழகம், புதுவையில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags:    

Similar News