தமிழ்நாடு செய்திகள்

ரிதன்யா மரண வழக்கு: கணவர், மாமனார், மாமியார் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

Published On 2025-07-07 20:32 IST   |   Update On 2025-07-07 20:36:00 IST
  • ரிதன்யா மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.
  • ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு சமூக நல அமைப்புகளும், பொதுமக்களும் போராடி வருகின்றனர்.

அவரது மரணம் தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கேட்டதால் ஜாமின் மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதி குண சேகரன் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News