தமிழ்நாடு செய்திகள்

தீவிரப் புயலாக வலுப்பெறும் 'மோன்தா'- 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்

Published On 2025-10-28 07:36 IST   |   Update On 2025-10-28 07:36:00 IST
  • இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும்.
  • தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

வங்கக்கடலில் உருவாகி உள்ள மோன்தா புயல் ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கில் 230 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News