தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? தமிழக அரசு விளக்கம்

Published On 2025-05-30 16:53 IST   |   Update On 2025-05-31 16:12:00 IST
  • தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் மாதம்திறக்கப்படுகிறது.
  • பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 9ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 1ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-ம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News