தமிழ்நாடு செய்திகள்
null

கரூர் கூட்ட நெரிசல் துயர சம்பவம் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தேவையில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Published On 2025-10-10 15:08 IST   |   Update On 2025-10-10 15:17:00 IST
  • மாநில காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதற்காகவே, சிபிஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டியதில்லை.
  • தவிர்க்க முடியாத சூழலில்தான் வழக்கை சிபிஐ-க்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கரூரில் மக்களை சந்தித்து உரையாற்றியபோது, கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரசாரத்திற்கு போதுமான இடம் வழங்கப்படவில்லை. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்னும் த.வெ.க. சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

அதேவேளையில் த.வெ.க. கட்சி நிர்வாகிகளின் குறைபாடுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என அரசு சார்பில் குற்றம்சாட்டுப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்ப விசாரணைக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேபோல், கூட்ட நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிய, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் பிரித்திக்கின் தந்தை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு சார்பில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு:-

* மாநில காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டு என்பதற்காகவே, சிபிஐ-க்கு வழக்கை மாற்ற வேண்டியதில்லை.

* தன்னுடைய மகனை இழந்து இங்கு நிற்கக்கூடிய அந்த தந்தையினுடைய வலி மட்டுமல்ல, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடைய அனைவரின் வலியையும் நாங்கள் அறிந்துள்ளோம்.

* அதேவேளையில், தான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற இந்த ஒரு காரணத்தின் அடிப்படைக் கொண்டு மட்டும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதிக்க கூடாது. ஏனெனில் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாடு அதிகாரிகள். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர வேண்டும்.

* இவ்வாறு பல வழக்குகளை தொடர்ச்சியாக சிபிஐ-க்கு மாற்றிக் கொண்டிருந்தால் சிபிஐ முன்பு அதிக அளவிலான வழக்குகள் குவிந்து கிடக்கும். ஆனால் சிபிஐக்கு இருப்பதோ Limited Resourceதான்.

* தவிர்க்க முடியாத சூழலில்தான் வழக்கை சிபிஐ-க்கு மாற்றலாம் என உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது.

Tags:    

Similar News