தமிழ்நாடு செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேரலையில் தோன்றும் நித்யானந்தா

Published On 2025-04-13 14:03 IST   |   Update On 2025-04-13 14:03:00 IST
  • நித்யானந்தா நான் உயிருடன் தான் இருக்கிறேன் என விளக்கி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
  • நாளை இரவு 8 மணி அளவில் தமிழிலும் நேரலையில் தோன்றி பேசுகிறார்.

பிரபல சாமியாரான நித்யானந்தா கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி அங்கு இருப்பதாக வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது. ஆனால் நித்யானந்தா நான் உயிருடன் தான் இருக்கிறேன் என விளக்கி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாளை தமிழ்ப் புத்தாண்டையொட்டி நித்யானந்தா இன்று இரவு 7 மணி அளவில் ஆங்கிலத்திலும், நாளை இரவு 8 மணி அளவில் தமிழிலும் நேரலையில் தோன்றி பேசுகிறார்.

இது தொடர்பாக நித்யானந்தா பக்தர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பதிவில் பகவான் ஜி நித்யானந்தா பரமசிவம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News